அறிவுடைமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #421 #422 #423 #424 #425 #426 #427 #428 #429 #430
குறள் #421
அறிவு குற்றம் தடுக்கும் படை ; பகைவரும் ஊக்கம் அழிக்க
முடியாத அரண்.

Tamil Transliteration
421 Arivatrang Kaakkung Karuvi Seruvaarkkum
Ullazhikka Laakaa Aran.

மேலதிக விளக்கங்கள்
குறள் #422
சென்ற மனத்தைச் சென்றபடி விடாது தீது நீக்கி
வழிப்படுத்துவதே அறிவு.

Tamil Transliteration
Sendra Itaththaal Selavitaa Theedhoreei
Nandrinpaal Uyppa Tharivu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #423
எச்செய்தியை யார் யாரிடம் கேட்டாலும் அதன்
உண்மையைக் காண்பதே அறிவு.

Tamil Transliteration
Epporul Yaaryaarvaaik Ketpinum Apporul
Meypporul Kaanpa Tharivu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #424
அருமையை எளிமையாக நீ சொல்லுக; பிறர் கூறும்
நுண்மையை விளங்கிக் கொள்ளுக.

Tamil Transliteration
Enporula Vaakach Chelachchollith Thaanpirarvaai
Nunporul Kaanpa Tharivu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #425
உலகத்தைத் தழுவிப் போவது சாதுரியம்: மகிழ்தலும்
வருந்தலும் இல்லாதது அறிவு.

Tamil Transliteration
Ulakam Thazheeiya Thotpam Malardhalum
Koompalum Illa Tharivu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #426
எங்ஙனம் போகின்றது உலகம் அங்ஙனம் ஒட்டி வாழ்வதே
அறிவுடைமை.

Tamil Transliteration
Evva Thuraivadhu Ulakam Ulakaththotu
Avva Thuraiva Tharivu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #427
மேல் வருவதை அறிபவர் அறிவுடையவர் : அத்திறமை
இல்லாதவர் அறிவில்லாதவர்.

Tamil Transliteration
Arivutaiyaar Aava Tharivaar Arivilaar
Aqdhari Kallaa Thavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #428
அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதைத்தன்மை; அதற்கு அஞ்சுதல்
அறிவுத்தன்மை .

Tamil Transliteration
Anjuva Thanjaamai Pedhaimai Anjuvadhu
Anjal Arivaar Thozhil.

மேலதிக விளக்கங்கள்
குறள் #429
வருமுன்னர்க் காக்க வல்ல அறிஞர்க்கு அதிர்ச்சி தரும்
துன்பம் வராது.

Tamil Transliteration
Edhiradhaak Kaakkum Arivinaark Killai
Adhira Varuvadhor Noi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #430
அறிவுடையவர் அறிவால் எல்லாம் உடையர் : அறிவிலார்
என்ன இருந்தும் இலர்

Tamil Transliteration
Arivutaiyaar Ellaa Mutaiyaar Arivilaar
Ennutaiya Renum Ilar.

மேலதிக விளக்கங்கள்
🡱