அழுக்காறாமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #161 #162 #163 #164 #165 #166 #167 #168 #169 #170
குறள் #161
மனத்தில் பொறாமை இல்லாத நிலையே ஒழுக்க நெறியாம்
என்று கொள்க.

Tamil Transliteration
Ozhukkaaraak Kolka Oruvandhan Nenjaththu
Azhukkaaru Ilaadha Iyalpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #162
யார்மேலும் பொறாமை இல்லை எனின் சிறந்த மேன்மை
வேறில்லை.

Tamil Transliteration
Vizhuppetrin Aqdhoppadhu Illaiyaar Maattum
Azhukkaatrin Anmai Perin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #163
தனக்கு நல்வளர்ச்சி வேண்டாம் என்பவனே மற்றவன்
வளர்ச்சிக்குப் பொறாமைப்படுவான்.

Tamil Transliteration
Aranaakkam Ventaadhaan Enpaan Piranaakkam
Penaadhu Azhukkarup Paan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #164
பொறாமையால் தமக்குத் தீதுவரும் ஆதலின்
பொறாமையால் பிறர்க்குத் தீது செய்யார்.

Tamil Transliteration
Azhukkaatrin Allavai Seyyaar Izhukkaatrin
Edham Patupaakku Arindhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #165
பொறாமையாளரைக் கெடுக்க அதுவே போதும்; பகைவர்
கொடுக்கத் தவறினும் அது தவறாது.

Tamil Transliteration
Azhukkaaru Utaiyaarkku Adhusaalum Onnaar
Vazhukka?yum Keteen Padhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #166
கொடுப்பதைக் கண்டு பொறாமைப்படுபவனது சுற்றத்தாரும்
உணவுஉடை இன்றி அழிவர்.

Tamil Transliteration
Kotuppadhu Azhukkaruppaan Sutram Utuppadhooum
Unpadhooum Indrik Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #167
மனம் சுருங்கிப் பொறாமைப்படுபவனைச் சீதேவி
மூதேவியிடம் ஒப்படைப்பாள்.

Tamil Transliteration
Avviththu Azhukkaaru Utaiyaanaich Cheyyaval
Thavvaiyaik Kaatti Vitum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #168
பொறாமையாகிய பாவம் செல்வம் கொடுத்துத் தீய
வழியிலும் கொண்டுபோய் விடும்.

Tamil Transliteration
Azhukkaaru Enaoru Paavi Thiruchchetruth
Theeyuzhi Uyththu Vitum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #169
பொறாமைப்படுபவன் உண்மையில் வளர்கிறானா? நல்லவன்
கெடுகிறானா? எண்ணிப்பார்.

Tamil Transliteration
Avviya Nenjaththaan Aakkamum Sevviyaan
Ketum Ninaikkap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #170
பொறாமையால் வாழ்வு விரிந்தவரும் இல்லை;
பொறுப்பதால் வளர்ச்சி குறைந்தவரும் இல்லை.

Tamil Transliteration
Azhukkatru Akandraarum Illai Aqdhuillaar
Perukkaththil Theerndhaarum Il.

மேலதிக விளக்கங்கள்
🡱