இகல் (மாறுபாடு)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #851 #852 #853 #854 #855 #856 #857 #858 #859 #860
குறள் #851
மாறுபாடு என்னும் குணம் உயிர்களுக்குள்
பகையுணர்ச்சியைப் பரப்பும் நோயாகும்.

Tamil Transliteration
Ikalenpa Ellaa Uyirkkum Pakalennum
Panpinmai Paarikkum Noi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #852
பகைமை கருதித் தகாதன் செய்தாலும் மாறுபாடு கருதிக்
கொடுமை செய்யற்க .

Tamil Transliteration
Pakalkarudhip Patraa Seyinum Ikalkarudhi
Innaasey Yaamai Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #853
மாறுபாடு என்னும் தொழுநோய் நீங்கினால் அழிவில்லாத
அறிவுவிளக்கம் உண்டாகும்.

Tamil Transliteration
Ikalennum Evvanoi Neekkin Thavalillaath
Thaavil Vilakkam Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #854
மாறுபாடு என்னும் பெருந்துன்பம் ஒழிந்தால் சிறந்த இன்பம்
விளையும்.

Tamil Transliteration
Inpaththul Inpam Payakkum Ikalennum
Thunpaththul Thunpang Ketin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #855
மாறுபாட்டுக்கு ஒதுங்கிப் போய்விடுவாரை வம்புக்குத் தூண்ட
யாரால் இயலும்?

Tamil Transliteration
Ikaledhir Saaindhozhuka Vallaarai Yaare
Mikalookkum Thanmai Yavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #856
வீம்பு மிகுதியை விரும்புபவன் வாழ்வு சிதைதலும் அழிதலும்
நாளாகாது.

Tamil Transliteration
Ikalin Mikalinidhu Enpavan Vaazhkkai
Thavalum Ketalum Naniththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #857
மாறுபடுதலை விரும்பும் கொடிய அறிவினர் மேன்மை
தரும் உண்மைப் பொருளை அறியார்.

Tamil Transliteration
Mikalmeval Meypporul Kaanaar Ikalmeval
Innaa Arivi Navar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #858
மாறுபாட்டுக்கு ஒதுங்குதல் முன்னேற்றமாம்; ஒதுங்காது
நிமிர்ந்தால் கேடு வளரும்.

Tamil Transliteration
Ikalirku Edhirsaaidhal Aakkam Adhanai
Mikalookkin Ookkumaam Ketu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #859
தனக்கு நலம் வரும்போது வேற்றுமை பாரான்: பிறனைக்
கெடுக்க வேறுபாட்டைப் பெருக்குவான்.

Tamil Transliteration
Ikalkaanaan Aakkam Varungaal Adhanai
Mikalkaanum Ketu Thararku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #860
எல்லாத் துன்பமும் வேற்றுமையால் வரும்; நலமான
உணர்ச்சி நல்லுறவால் உண்டாம்

Tamil Transliteration
Ikalaanaam Innaadha Ellaam Nakalaanaam
Nannayam Ennum Serukku.

மேலதிக விளக்கங்கள்
🡱