இரவு (பிச்சை )

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1051
கேட்கத் தக்கவரிடம் உதவி கேட்க; ஒளித்தால் அவர்க்குப்
பழி , உனக்கு இல்லை

Tamil Transliteration
Irakka Iraththakkaark Kaanin Karappin
Avarpazhi Thampazhi Andru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1052
கேட்ட பொருள்கள் கடினமின்றிக் கிடைப்பின் உதவி
கேட்பதும் மகிழ்ச்சியைத் தரும்.

Tamil Transliteration
Inpam Oruvarku Iraththal Irandhavai
Thunpam Uraaa Varin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1053
ஒளிக்காத மனமும் கடமையுணர்ச்சியும் உடையவர்
முன்நின்று இரத்தலும் ஓர் அழகு.

Tamil Transliteration
Karappilaa Nenjin Katanarivaar Munnindru
Irappumo Reer Utaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1054
ஒளிப்பதைக் கனவிலும் அறியாதாரிடம் சென்று கேட்பது
கொடுப்பதை ஒக்கும்.

Tamil Transliteration
Iraththalum Eedhale Polum Karaththal
Kanavilum Thetraadhaar Maattu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1055
நேர்நின்று ஒருவர் இரக்க முற்படுவது ஒளிக்காதவர்
உலகத்து இருப்பதால் அன்றோ ?

Tamil Transliteration
Karappilaar Vaiyakaththu Unmaiyaal Kannindru
Irappavar Merkol Vadhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1056
ஒளிக்கும் துயரம் இல்லாரைக் கண்டால் வறுமைத் துயரம்
எல்லாம் போய்விடும்.

Tamil Transliteration
Karappitumpai Yillaaraik Kaanin Nirappitumpai
Ellaam Orungu Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1057
இகழ்ந்து பேசாது கொடுப்பாரைக் கண்டால் உள்ளம்
உள்ளுக்குள்ளே மகிழும்.

Tamil Transliteration
Ikazhndhellaadhu Eevaaraik Kaanin Makizhndhullam
Ullul Uvappadhu Utaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1058
உதவி கேட்பார் இல்லாவிடின் இப்பேருலகம்
மரப்பாவைபோல உணர்ச்சியற்று நடக்கும்.

Tamil Transliteration
Irappaarai Illaayin Eernganmaa Gnaalam
Marappaavai Sendruvan Thatru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1059
இரந்து கொள்ள விரும்புவோர் இல்லாதபோது
கொடுப்பவர்க்குப் பெருமிதம் என்ன உண்டு?

Tamil Transliteration
Eevaarkan Ennuntaam Thotram Irandhukol
Mevaar Ilaaak Katai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1060
இரப்பவனுக்குக் கோபம் வருதல் கூடாது: தான்
வறுமைப்படுவதே அதற்குச் சான்று.

Tamil Transliteration
Irappaan Vekulaamai Ventum Nirappitumpai
Thaaneyum Saalum Kari.

மேலதிக விளக்கங்கள்
🡱