ஊடலுவகை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1321
அவரிடம் ஒரு தவறும் இல்லை யாயினும் ஊடல் அவரைப்
பேரன்பு கொள்ளச் செய்யும்.

Tamil Transliteration
Illai Thavaravarkku Aayinum Ootudhal
Valladhu Avaralikku Maaru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1322
ஊடலால் சிறுபொழுது தோன்றும் வெறுப்பு அவரன்பை
வருத்தினும் பெருமைக்கு உரியது.

Tamil Transliteration
Ootalin Thondrum Sirudhuni Nallali
Vaatinum Paatu Perum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1323
மண்ணோடு நீர் குழைந்தாற் போன்ற காதலரிடம்
ஊடுதலைவிடத் தேவருலகம் இன்பமானதோ?

Tamil Transliteration
Pulaththalin Puththelnaatu Unto Nilaththotu
Neeriyain Thannaar Akaththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1324
காதலரை உடனே தழுவிவிடாத ஊடலில் என் நிறையை
உடைக்கும் படை பிறக்கின்றது.

Tamil Transliteration
Pulli Vitaaap Pulaviyul Thondrumen
Ullam Utaikkum Patai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1325
தவறில்லை யாயினும் தன் காதலியின் தோளைச் சிறிது
பிரிந்திருத்தலில் ஓரின்பம் உண்டு.

Tamil Transliteration
Thavarilar Aayinum Thaamveezhvaar Mendrol
Akaralin Aangon Rutaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1326
உண்பதைவிட உண்டது செரித்தல் இன்பம்; காமம்
சேர்தலைவிடப் பிணங்குதல் இன்பம்.

Tamil Transliteration
Unalinum Untadhu Aralinidhu Kaamam
Punardhalin Ootal Inidhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1327
ஊடலில் தோல்விப்பட்டவரே வென்றவர்; அவ்வுண்மை
கூடுஞ் செய்கையில் விளங்கும்.

Tamil Transliteration
Ootalil Thotravar Vendraar Adhumannum
Kootalir Kaanap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1328
நெற்றி வேர்க்கப் புணர்ந்த இனிமையை இன்னும்
ஒருமுறை ஊடிப் பெறுவேனோ?

Tamil Transliteration
Ootip Perukuvam Kollo Nudhalveyarppak
Kootalil Thondriya Uppu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1329
காதலி மேன்மேலும் ஊடுக ; நான் வேண்ட இரவு நேரம்
மேன்மேலும் நீளுக.

Tamil Transliteration
Ootuka Manno Oliyizhai Yaamirappa
Neetuka Manno Iraa.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1330
காமவுணர்ச்சிக்கு ஊடுதல் இன்பம்; கூடித் தழுவுவதே
அதற்குப் பேரின்பம்.

Tamil Transliteration
Ootudhal Kaamaththirku Inpam Adharkinpam
Kooti Muyangap Perin.

மேலதிக விளக்கங்கள்
🡱