ஒப்புரவறிதல் (பொதுக்கொடை)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #211 #212 #213 #214 #215 #216 #217 #218 #219 #220
குறள் #211
கடமை கைம்மாறு எதிர்பார்ப்பதில்லை; உலகம் மழைக்கு
என்ன செய்ய முடியும்?

Tamil Transliteration
Kaimmaaru Ventaa Katappaatu Maarimaattu
En Aatrung Kollo Ulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #212
மிக முயன்று சேர்த்த பொருளெல்லாம் உதவிபெறத்
தக்கவர்க்கு உதவி செய்தற்கே.

Tamil Transliteration
Thaalaatrith Thandha Porulellaam Thakkaarkku
Velaanmai Seydhar Poruttu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #213
தேவர் உலகத்திலும் நம் உலகத்திலும் பொது
நன்மையினும் சிறந்த செயல் இல்லை

Tamil Transliteration
Puththe Lulakaththum Eentum Peralaridhe
Oppuravin Nalla Pira.

மேலதிக விளக்கங்கள்
குறள் #214
ஒத்த பொதுநலத்தை அறிந்தவனே வாழ்பவன்: அறியாதவன்
செத்தவரைச் சேர்ந்தவன்.

Tamil Transliteration
Oththa Tharavon Uyirvaazhvaan Matraiyaan
Seththaarul Vaikkap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #215
உலக நலம் விரும்பும் பேரறிஞனது செல்வம் ஊருணியில்
நிறைந்த நீர் போலாகும்.

Tamil Transliteration
Ooruni Neernirain Thatre Ulakavaam
Perari Vaalan Thiru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #216
உலக அன்பு உடையவனிடம் செல்வம் இருப்பது பழமரம்
ஊர்நடுவே பழுத்தது போன்றது

Tamil Transliteration
Payanmaram Ulloorp Pazhuththatraal Selvam
Nayanutai Yaankan Patin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #217
பேரருளாளன் இடத்துச் செல்வம் இருப்பது யார்க்கும்
கிடைக்கும் மருந்து மரம் போலும்.

Tamil Transliteration
Marundhaakith Thappaa Maraththatraal Selvam
Perundhakai Yaankan Patin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #218
ஊர்க்கடமையை அறிந்த அறிவுடையவர்
வறுமைக்காலத்தும் பொதுநலம் குறையார்.

Tamil Transliteration
Itanil Paruvaththum Oppuravirku Olkaar
Katanari Kaatchi Yavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #219
செய்யவேண்டியன் செய்ய இயலாமையே நல்ல
அன்பனுக்கு வறுமையாகும்.

Tamil Transliteration
Nayanutaiyaan Nalkoorndhaa Naadhal Seyumneera
Seyyaadhu Amaikalaa Vaaru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #220
பொது நன்மையினால் கேடு வருமென்றால் அக்கேடு
விலைபோகும் மதிப்புடையது.

Tamil Transliteration
Oppuravi Naalvarum Ketenin Aqdhoruvan
Vitrukkol Thakka Thutaiththu.

மேலதிக விளக்கங்கள்
🡱