ஒற்றாடல் (உளவு)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #581 #582 #583 #584 #585 #586 #587 #588 #589 #590
குறள் #581
உளவும் புகழ்பெற்ற நீதிநூலும் இரண்டும் மன்னவனுக்குக்
கண்கள் என்று தெளிக.

Tamil Transliteration
Otrum Uraisaandra Noolum Ivaiyirantum
Thetrenka Mannavan Kan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #582
யாரிடத்தும் எதனையும் என்றும் உளவால் விரைந்து அறிதல்
வேந்தன் கடமை.

Tamil Transliteration
Ellaarkkum Ellaam Nikazhpavai Egngnaandrum
Vallaridhal Vendhan Thozhil.

மேலதிக விளக்கங்கள்
குறள் #583
உளவால் செய்தி அறிந்துகொள்ளாத அரசன் கொள்ளும்
வெற்றி எதுவும் இல்லை.

Tamil Transliteration
Otrinaan Otrip Poruldheriyaa Mannavan
Kotrang Kolakkitandhadhu Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #584
வினையார் சுற்றத்தார் பகைவர் என்ற எத்திறத்தாரையும்
ஆராய்வது உளவு.

Tamil Transliteration
Vinaiseyvaar Thamsutram Ventaadhaar Endraangu
Anaivaraiyum Aaraaivadhu Otru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #585
ஐயப்படாத வடிவோடு அஞ்சாது பார்த்து எவ்விடத்தும்
வெளியிடாதவனே ஒற்றன்.

Tamil Transliteration
Kataaa Uruvotu Kannanjaadhu Yaantum
Ukaaamai Valladhe Otru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #586
துறவு வேடங்கொண்டு எவ்விடமும் புகுந்து என்ன
நேரினும் வாய்விடாதவனே ஒற்றன்.

Tamil Transliteration
Thurandhaar Pativaththa Raaki Irandhaaraaindhu
Enseyinum Sorviladhu Otru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #587
மறைவான செய்திகளை ஒட்டுக் கேட்டு அறிந்தவற்றில்
தெளிவுடையவனே ஒற்றன்.

Tamil Transliteration
Maraindhavai Ketkavar Raaki Arindhavai
Aiyappaatu Illadhe Otru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #588
ஓர் உளவாளி கொண்டுவந்த செய்தியையும் பின்னும் ஓர்
உளவாளியால் தெளிக.

Tamil Transliteration
Otrotrith Thandha Porulaiyum Matrumor
Otrinaal Otrik Kolal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #589
உளவாளிகளைத் தம்முள் தெரியாவாறு ஆள்க; மூவர்க்கும்
ஒத்த செய்தி நம்பத்தகும்.

Tamil Transliteration
Otrer Runaraamai Aalka Utanmoovar
Sotrokka Therap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #590
பலரறிய ஒற்றனுக்குச் சிறப்புச் செய்யாதே: செய்யின் மறைவு
வெளிப்படுத்தியதாகும்.

Tamil Transliteration
Sirappariya Otrinkan Seyyarka Seyyin
Purappatuththaan Aakum Marai.

மேலதிக விளக்கங்கள்
🡱