கடவுள் வாழ்த்து

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #1 #2 #3 #4 #5 #6 #7 #8 #9 #10
குறள் #1
அகரஒலி எல்லா எழுத்துக்கும் முதலாகும்;
ஆதிபகவன் உலகுக்கெல்லாம் முதலாவான்.

Tamil Transliteration
Akara Mudhala Ezhuththellaam Aadhi
Pakavan Mudhatre Ulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #2
கற்றதன் பயனென்ன? தூய அறிஞனது நல்ல திருவடியை
வணங்கா விட்டால்.

Tamil Transliteration
Katradhanaal Aaya Payanenkol Vaalarivan
Natraal Thozhaaar Enin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #3
நெஞ்சமலரில் இருப்பவன் அடியை நினைப்பவர் இவ்வுலகில்
நெடுங்காலம் வாழ்வர்

Tamil Transliteration
Malarmisai Ekinaan Maanati Serndhaar
Nilamisai Neetuvaazh Vaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #4
விருப்பு வெறுப்பு இல்லாதவனை நினைத்தவர்க்கு என்றும்
துன்பங்கள் இல்லை.

Tamil Transliteration
Ventudhal Ventaamai Ilaanati Serndhaarkku
Yaantum Itumpai Ila.

மேலதிக விளக்கங்கள்
குறள் #5
இறைவனது உண்மைப் புகழை விரும்புவாரை அறிவில்லாத
வினைகள் நெருங்கா.

Tamil Transliteration
Irulser Iruvinaiyum Seraa Iraivan
Porulser Pukazhpurindhaar Maattu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #6
ஜம்புலனையும் அழித்தவனது மெய்ந் நெறியைக் கடைப் பிடித்தவர்
நெடுங்காலம் வாழ்வர்.

Tamil Transliteration
Porivaayil Aindhaviththaan Poidheer Ozhukka
Nerinindraar Neetuvaazh Vaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #7
உவமை கடந்தவன் அடியை நினைந்தாலன்றி மனக் கவலையை
மாற்ற முடியாது.

Tamil Transliteration
Thanakkuvamai Illaadhaan Thaalserndhaark Kallaal
Manakkavalai Maatral Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #8
அறக்கடலாம் அருளாளன் அடியை நினைந் தாலன்றிப் பாவக்
கடலைக் கடக்க முடியாது.

Tamil Transliteration
Aravaazhi Andhanan Thaalserndhaark Kallaal
Piravaazhi Neendhal Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #9
எண்குணம் உடையவன் அடியை வணங்காத்தலை பாராதகண்
கேளாத செவி போலப் பயனற்றது.

Tamil Transliteration
Kolil Poriyin Kunamilave Enkunaththaan
Thaalai Vanangaath Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #10
இறைவன் அடியை நினைந்தவர் பிறவிக்கடலைக் கடப்பர்;
நினையாதவர் கடவார்.

Tamil Transliteration
Piravip Perungatal Neendhuvar Neendhaar
Iraivan Atiseraa Thaar.

மேலதிக விளக்கங்கள்
🡱