காதற் சிறப்புரைத்தல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1121
கொஞ்சுமொழி பேசும் வெண்பல்லில் ஊறிய நீர் பாலும்
தேனும் கலந்தாற் போலும்.

Tamil Transliteration
Paalotu Thenkalan Thatre Panimozhi
Vaaleyiru Ooriya Neer.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1122
உடம்புக்கும் உயிருக்கும் என்ன உறவு அன்ன உறவு
இவளுக்கும் எனக்கும்.

Tamil Transliteration
Utampotu Uyiritai Ennamar Ranna
Matandhaiyotu Emmitai Natpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1123
என் நெற்றியழகிக்கு இடம் வேறில்லை ; கருவிழியிற்
பாவையே! நீ போய்விடு.

Tamil Transliteration
Karumaniyir Paavaainee Podhaayaam Veezhum
Thirunudharku Illai Itam.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1124
புணருங்கால் உயிர் இருத்தல் போன்றவள்; பிரியுங்கால் அது
பிரிதல் போன்றவள்.

Tamil Transliteration
Vaazhdhal Uyirkkannal Aayizhai Saadhal
Adharkannal Neengum Itaththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1125
போராடும் கண்களை யுடையவள் குணங்களை மறந்தால்
நினைப்பேன்; மறக்கவே இல்லை .

Tamil Transliteration
Ulluvan Manyaan Marappin Marappariyen
Ollamark Kannaal Kunam.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1126
எம் காதலர் மிகவும் சிறிய வடிவினர்: கண்ணுள் இருப்பார்.
இமைப்பின் வருந்தார் .

Tamil Transliteration
Kannullin Pokaar Imaippin Parukuvaraa
Nunniyarem Kaadha Lavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1127
காதலர் கண்ணுள் இருக்கின்றார் ஆதலின் சிறிது மறைவார்
என்றஞ்சி மையும் தீட்டேன்.

Tamil Transliteration
Kannullaar Kaadha Lavaraakak Kannum
Ezhudhem Karappaakku Arindhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1128
காதலர் நெஞ்சில் உள்ளார் ஆதலின் வெந்து போவார் என்று
சூடாக உண்ணேன்.

Tamil Transliteration
Nenjaththaar Kaadha Lavaraaka Veydhuntal
Anjudhum Vepaak Karindhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1129
இமைத்தால் மறைவாரென இமையேன் : அதற்கே அவரை
அயலவர் என்று இவ்வூர் தூற்றும்.

Tamil Transliteration
Imaippin Karappaakku Arival Anaiththirke
Edhilar Ennum Iv Voor.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1130
என் நெஞ்சில் என்றும் மகிழ்ந்து இருக்கின்றார்; பிரிந்தார்
அயலவர் என்று ஊர் பழிக்கும்.

Tamil Transliteration
Uvandhuraivar Ullaththul Endrum Ikandhuraivar
Edhilar Ennum Iv Voor.

மேலதிக விளக்கங்கள்
🡱