குடிசெயல் வகை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1021
குடும்பக்கடமை செய்யப் பின்வாங்கேன் என்ற
பெருமைபோலப் பெருமையுடையது வேறில்லை.

Tamil Transliteration
Karumam Seyaoruvan Kaidhooven Ennum
Perumaiyin Peetutaiyadhu Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1022
நீண்ட முயற்சியும் நிறைந்த அறிவும் என்ற இரண்டின்
பெருஞ்செயலால் குடி பெருகும்.

Tamil Transliteration
Aalvinaiyum Aandra Arivum Enairantin
Neelvinaiyaal Neelum Kuti.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1023
குடும்பத்தை உயர்த்துவேன் என்பானுக்குத் தெய்வம் வரிந்து
கட்டிக்கொண்டு முன்வரும்.

Tamil Transliteration
Kutiseyval Ennum Oruvarkuth Theyvam
Matidhatruth Thaanmun Thurum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1024
தன்குடும்பம் கீழாகாமல் உழைக்கின்றவனுக்கு இயல்பாக
எல்லாம் தானே நிறைவேறும்.

Tamil Transliteration
Soozhaamal Thaane Mutiveydhum Thamkutiyaith
Thaazhaadhu Ugnatru Pavarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1025
குற்றமின்றிக் குடும்பம் காத்து வாழ்பவனைச் சுற்றமாக
உலகம் சுற்றிக் கொள்ளும்.

Tamil Transliteration
Kutram Ilanaaik Kutiseydhu Vaazhvaanaich
Chutramaach Chutrum Ulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1026
ஒருவர்க்கு நல்லவீரம் என்பது தான் பிறந்த
வீட்டுப்பொறுப்பைத்தனதாக்கிக்கொள்ளுவதே.

Tamil Transliteration
Nallaanmai Enpadhu Oruvarkuth Thaanpirandha
Illaanmai Aakkik Kolal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1027
போரில் பொறுப்பு பெருவீரரையே சாரும்; வீட்டுச் சுமை
தாங்கவல்லார்மேலே விழும்

Tamil Transliteration
Amarakaththu Vankannar Polath Thamarakaththum
Aatruvaar Metre Porai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1028
கடமை செய்வார்க்குக் காலம் என்பது இல்லை; சோம்பி
வீண்பெருமை கருதின் குடிகெடும்.

Tamil Transliteration
Kutiseyvaark Killai Paruvam Matiseydhu
Maanang Karudhak Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1029
குடும்பத்தைக் குற்றப்படாமல் காப்பவனது உடம்பு
துன்பத்தின் உறைவிடமோ?

Tamil Transliteration
Itumpaikke Kolkalam Kollo Kutumpaththaik
Kutra Maraippaan Utampu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1030
முட்டுக் கொடுக்கும் ஆளில்லாத குடும்பம் துன்பம்
தாக்கினால் அடியோடு விழும்.

Tamil Transliteration
Itukkankaal Kondrita Veezhum Atuththoondrum
Nallaal Ilaadha Kuti.

மேலதிக விளக்கங்கள்
🡱