குறிப்பறிவுறுத்தல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1271
நீ மறைத்தாலும் மீறி உன் கருங்கண்கள் ஏதோ ஒன்றைச்
சொல்லுகின்றன.

Tamil Transliteration
Karappinung Kaiyikan Thollaanin Unkan
Uraikkal Uruvadhon Runtu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1272
கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் பெற்ற
காதலிக்குப் பெண் தன்மை மிகுதி

Tamil Transliteration
Kanniraindha Kaarikaik Kaamperdhot Pedhaikkup
Penniraindha Neermai Peridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1273
மணிக்கோவையுள் நூல் தெரிவது போல மங்கை அழகில்
ஒரு குறிப்புத் தெரிகின்றது.

Tamil Transliteration
Maniyil Thikazhdharu Noolpol Matandhai
Aniyil Thikazhvadhondru Untu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1274
மொட்டுக்குள் மணம் இருத்தல் போல இவள் சிரிப்புக்குள்
ஒரு குறிப்பு உண்டு

Tamil Transliteration
Mukaimokkul Ulladhu Naatrampol Pedhai
Nakaimokkul Ulladhon Runtu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1275
வளை நிறைந்தவள் செய்து போன கள்ளத்தில் என் துயர்
தீர்க்கும் மருந்து உண்டு.

Tamil Transliteration
Seridhoti Seydhirandha Kallam Urudhuyar
Theerkkum Marundhondru Utaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1276
மிக அன்பு காட்டி ஆசையாகக் கூடுவதில் பிரியும்
கொடுமைக் குறிப்பு உண்டு.

Tamil Transliteration
Peridhaatrip Petpak Kalaththal Aridhaatri
Anpinmai Soozhva Thutaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1277
குளிர்ந்த துறைவன் பிரிவான் என்பதை நம்மினும் முந்தி
வளையல்கள் உணர்ந்தன.

Tamil Transliteration
Thannan Thuraivan Thanandhamai Namminum
Munnam Unarndha Valai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1278
நேற்றுத்தான் காதலர் பிரிந்தார். அதற்குள் ஏழு நாள் அளவு
பசலை அடைந்து விட்டேன்.

Tamil Transliteration
Nerunatruch Chendraarem Kaadhalar Yaamum
Ezhunaalem Meni Pasandhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1279
வளையலையும் தோளையும் காலையும் பார்த்தாள்; இது
பிரிவு சொன்னபோது அவள் செய்தது.

Tamil Transliteration
Thotinokki Mendholum Nokki Atinokki
Aqdhaan Tavalsey Thadhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1280
காமநோயைக் கண்ணாற் சொல்லி வேண்டுதல் சிறந்த
பெண்தன்மை என்று சொல்லுவர்.

Tamil Transliteration
Penninaal Penmai Utaiththenpa Kanninaal
Kaamanoi Solli Iravu.

மேலதிக விளக்கங்கள்
🡱