குற்றங் கடிதல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #431 #432 #433 #434 #435 #436 #437 #438 #439 #440
குறள் #431
கருவமும் சினமும் இழிவும் இல்லாதவர் முன்னேற்றம்
மேலானது.

Tamil Transliteration
Serukkunj Chinamum Sirumaiyum Illaar
Perukkam Perumidha Neerththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #432
கஞ்சத் தன்மையும் பொய்யான மானமும் வேண்டாத
மகிழ்ச்சியும் வேந்தன் கேடுகள்.

Tamil Transliteration
Ivaralum Maanpirandha Maanamum Maanaa
Uvakaiyum Edham Iraikku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #433
சிறுகுற்றம் செய்யினும் பெரிதாக எண்ணுவர் பழிக்கு
நாணும் பெரியவர்.

Tamil Transliteration
Thinaiththunaiyaang Kutram Varinum Panaiththunaiyaak
Kolvar Pazhinaanu Vaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #434
குற்றமே குழிதோண்டும் உட்பகை ஆதலின் குற்றத்தை
விழிப்போடு தடுப்பாயாக.

Tamil Transliteration
Kutrame Kaakka Porulaakak Kutrame
Atran Tharooum Pakai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #435
குற்றம் வருமுன்னே தடுக்காதவன் வாழ்வு தீ முன்
வைக்கோற் போர் போல அழியும்.

Tamil Transliteration
Varumunnark Kaavaadhaan Vaazhkkai Erimunnar
Vaiththooru Polak Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #436
தன் குறையை நீக்கிப் பிறர்குறை கூறின் அரசனை யாரும்
குறை சொல்லார்.

Tamil Transliteration
Thankutram Neekkip Pirarkutrang Kaankirpin
Enkutra Maakum Iraikku?.

மேலதிக விளக்கங்கள்
குறள் #437
செய்வன் செய்யாது சிக்கெனப் பிடித்தவனது செல்வம்
தப்பும் வழியன்றிக் கெடும்.

Tamil Transliteration
Seyarpaala Seyyaa Thivariyaan Selvam
Uyarpaala Thandrik Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #438
பொருட் பற்றாகிய கஞ்சத் தன்மை எத்தன்மையிலும் மிக
இழிந்தது.

Tamil Transliteration
Patrullam Ennum Ivaranmai Etrullum
Ennap Patuvadhon Randru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #439
எக்காலத்தும் தன்னைப் புகழாதே; கெடுதல் வினையை
என்றும் விரும்பாதே .

Tamil Transliteration
Viyavarka Egngnaandrum Thannai Nayavarka
Nandri Payavaa Vinai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #440
தன்விருப்பம் வெளிப்படாதபடி நடப்பின் பகைவர் சூழ்ச்சிகள்
பயன்படா.

Tamil Transliteration
Kaadhala Kaadhal Ariyaamai Uykkirpin
Edhila Edhilaar Nool.

மேலதிக விளக்கங்கள்
🡱