சிற்றினம் சேராமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #451 #452 #453 #454 #455 #456 #457 #458 #459 #460
குறள் #451
பெரியவர் சிறியவரோடு பழக அஞ்சுவர்; சிறியார்
சிறியாரையே உறவு கொள்வர்.

Tamil Transliteration
451 Sitrinam Anjum Perumai Sirumaidhaan
Sutramaach Choozhndhu Vitum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #452
மழை தான் விழுந்த மண்தன்மையைப் பெறும்; அறிவு
சேர்ந்த குழுத்தன்மையைப் பெறும்.

Tamil Transliteration
Nilaththiyalpaal Neerdhirin Thatraakum Maandharkku
Inaththiyalpa Thaakum Arivu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #453
மக்கட்கு மனத்தால் உணர்ச்சி உண்டாம்; சேர்க்கையால் உரிய
மதிப்பு உண்டாம்.

Tamil Transliteration
Manaththaanaam Maandhark Kunarchchi Inaththaanaam
Innaan Enappatunj Chol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #454
அறிவு மனத்தை ஒட்டியது போல் தோன்றும்; உண்மையில்
பழகும் இனத்தை ஒட்டியது.

Tamil Transliteration
Manaththu Ladhupolak Kaatti Oruvarku
Inaththula Thaakum Arivu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #455
மனத் தூய்மை செயல் தூய்மை இரண்டும் நல்ல
கூட்டுறவால் வரும்.

Tamil Transliteration
Manandhooimai Seyvinai Thooimai Irantum
Inandhooimai Thoovaa Varum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #456
நன்மனத்தார்க்குப் பின் வழி நன்றாகும்; நல்லினத்தார்க்கு
எல்லாமே நன்றாகும்.

Tamil Transliteration
Manandhooyaark Kechchamnan Raakum Inandhooyaarkku
Illainan Raakaa Vinai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #457
நன்மனம் உயிர்க்கு ஆக்கம் தரும்; நற்கூட்டு எல்லாப்
புகழும் தரும்.

Tamil Transliteration
Mananalam Mannuyirk Kaakkam Inanalam
Ellaap Pukazhum Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #458
சான்றோர்க்கு மனம் நல்லதாக இருப்பினும் இனமும்
நல்லதாக இருப்பது சிறப்பு.

Tamil Transliteration
Mananalam Nankutaiya Raayinum Saandrorkku
Inanalam Emaap Putaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #459
நன்மனத்தால் மறுமை யின்பம் கிடைக்கும்; அதற்கும்
நற்கூட்டு நல்லது.

Tamil Transliteration
Mananalaththin Aakum Marumaimar Raqdhum
Inanalaththin Emaap Putaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #460
நல்ல சேர்க்கையினும் சிறந்த துணையில்லை; கெட்ட
சேர்க்கையினும் வேறு கேடில்லை.

Tamil Transliteration
Nallinaththi Noongun Thunaiyillai Theeyinaththin
Allar Patuppadhooum Il.

மேலதிக விளக்கங்கள்
🡱