செய்ந்நன்றி அறிதல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #101 #102 #103 #104 #105 #106 #107 #108 #109 #110
குறள் #101
கேளாமலே முன்வந்து செய்த உதவிக்கு உலகமும்
வானமும் கொடுத்தாலும் ஈடாகா

Tamil Transliteration
Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum
Vaanakamum Aatral Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #102
நற்சமயத்துச் செய்த உதவி சிறிதாயினும் உலகத்தை விட
மிகச் சிறந்தது.

Tamil Transliteration
Kaalaththi Naarseydha Nandri Siridheninum
Gnaalaththin Maanap Peridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #103
பயன் கருதாது செய்த உதவியின் நன்மை எண்ணிப்
பார்ப்பின், கடலினும் பெரியது.

Tamil Transliteration
Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin
Nanmai Katalin Peridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #104
சிறிதளவு நன்மை செய்தாலும் பயனறிந்தோர் பெரிய
நன்மையாகக் கருதுவர்.

Tamil Transliteration
Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak
Kolvar Payandheri Vaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #105
உதவி உதவிய பொருளைப் பொறுத்ததன்று: உதவி
பெற்றவரின் பண்பினைப் பொறுத்தது.

Tamil Transliteration
Udhavi Varaiththandru Udhavi Udhavi
Seyappattaar Saalpin Varaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #106
தூயவர் நட்பை மறவாதே; துன்பத்தில் துணை செய்தார்
நட்பைத் துறவாதே.

Tamil Transliteration
Maravarka Maasatraar Kenmai Thuravarka
Thunpaththul Thuppaayaar Natpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #107
துன்பக் கண்ணீரைத் துடைத்தவர் நட்பினை எடுக்கின்ற
பிறப்பெல்லாம் எண்ணுவர்.

Tamil Transliteration
Ezhumai Ezhupirappum Ulluvar Thangan
Vizhuman Thutaiththavar Natpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #108
உதவியை மறப்பது என்றும் நல்லதில்லை ; உதவாமையை
உடனே மறப்பது நல்லது.

Tamil Transliteration
Nandri Marappadhu Nandrandru Nandralladhu
Andre Marappadhu Nandru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #109
ஒரு நன்மை செய்தவர் பெருந்தீமை செய்தாலும்
அந்நன்மையை நினைக்கவே தீமை மறையும்.

Tamil Transliteration
Kondranna Innaa Seyinum Avarseydha
Ondrunandru Ullak Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #110
எந்த நலத்தை அழித்தாலும் பிழைக்கலாம்; நன்றி கெட்டால்
பிழைப்பில்லை.

Tamil Transliteration
Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai
Seynnandri Kondra Makarku.

மேலதிக விளக்கங்கள்
🡱