தீவினையச்சம்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #201 #202 #203 #204 #205 #206 #207 #208 #209 #210
குறள் #201
கொடியவர் தீவினைகளை அஞ்சாது செய்வர்: நல்லவர்
செய்ய அஞ்சுவர்.

Tamil Transliteration
Theevinaiyaar Anjaar Vizhumiyaar Anjuvar
Theevinai Ennum Serukku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #202
யார்க்கும் கொடுமைகள் கொடுமை தரும்; தீயைக்
காட்டிலும் அவற்றை நெருங்காதே.

Tamil Transliteration
Theeyavai Theeya Payaththalaal Theeyavai
Theeyinum Anjap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #203
கொடுமைகளைப் பகைவர்க்கும் செய்யாது ஒழிக அதுவே
அறிவிற் சிறந்த அறிவாகும்.

Tamil Transliteration
Arivinul Ellaan Thalaiyenpa Theeya
Seruvaarkkum Seyyaa Vital.

மேலதிக விளக்கங்கள்
குறள் #204
மறந்தும் பிறனுக்குக் கேடு எண்ணாதே. எண்ணின், அறம்
உன்னை வாழவிடுமா?

Tamil Transliteration
Marandhum Piranketu Soozharka Soozhin
Aranjoozham Soozhndhavan Ketu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #205
இல்லை என்பதற்காகத் தீமைகள் செய்யாதே; செய்யின்
திரும்பவும் பெரிய ஏழையாவாய்.

Tamil Transliteration
Ilan Endru Theeyavai Seyyarka Seyyin
Ilanaakum Matrum Peyarththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #206
துன்பங்கள் தன்னைத் தொடவிரும்பாதவன் பிறர்க்குத்
தீமைகள் செய்யாது இருப்பானாக.

Tamil Transliteration
Theeppaala Thaanpirarkan Seyyarka Noippaala
Thannai Atalventaa Thaan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #207
எனைப் பெரிய பகையிலிருந்தும் தப்பிக்கலாம்; கொடுமைப்
பகையோ விடாது கொல்லும்.

Tamil Transliteration
Enaippakai Yutraarum Uyvar Vinaippakai
Veeyaadhu Pinsendru Atum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #208
கொடுமை செய்தார் கெடுவது உறுதி: நிழல் ஒருவன்
அடியைவிட்டு நீங்குமா?

Tamil Transliteration
Theeyavai Seydhaar Ketudhal Nizhaldhannai
Veeyaadhu Atiurain Thatru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #209
தான் வாழ ஆசை இருக்குமானால் சிறிதும் தீவினைப்
பக்கம் செல்லாதே.

Tamil Transliteration
Thannaiththaan Kaadhala Naayin Enaiththondrum
Thunnarka Theevinaip Paal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #210
நெறிவிலகிக் கொடுமை இழையாதவன் என்றும்
கேடில்லாதவன் எனத் தெளிக.

Tamil Transliteration
Arungetan Enpadhu Arika Marungotith
Theevinai Seyyaan Enin.

மேலதிக விளக்கங்கள்
🡱