தெரிந்து தெளிதல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #501 #502 #503 #504 #505 #506 #507 #508 #509 #510
குறள் #501
அறம் பொருள் இன்பம் உயிர்க்கு அஞ்சுதல் இவ்வகையால்
ஒருவனை ஆராய்ந்து தெளிக.

Tamil Transliteration
Aramporul Inpam Uyirachcham Naankin
Thirandherindhu Therap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #502
நற்குடியிற் பிறந்து குற்றம் இல்லாமல் பழிக்கு நாணுபவனே
நம்பத் தக்கவன்.

Tamil Transliteration
Kutippirandhu Kutraththin Neengi Vatuppariyum
Naanutaiyaan Sutte Thelivu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #503
சிறந்தவை கற்றுத் தெளிந்தவர் இடத்தும் பார்த்தால் ஓரளவு
அறியாமை இருக்கும்.

Tamil Transliteration
Ariyakatru Aasatraar Kannum Theriyungaal
Inmai Aridhe Veliru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #504
ஒருவர் குணங்களையும் குற்றங்களையும் பார்த்து
அவற்றுள் மிகுதியைக் கொண்டு தெளிக.

Tamil Transliteration
Kunamnaatik Kutramum Naati Avatrul
Mikainaati Mikka Kolal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #505
இவர் பெரியவர் இவர் சிறியவர் என்று அறிய அவரவர்
செயலே உரைகல்லாகும்.

Tamil Transliteration
Perumaikkum Enaich Chirumaikkum Thaththam
Karumame Kattalaik Kal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #506
மிக வறியவரை நம்பாதே. ஏன்? அவர் எப்பிடிப்பும் இல்லார்:
பழிக்கும் அஞ்சார்.

Tamil Transliteration
Atraaraith Therudhal Ompuka Matravar
Patrilar Naanaar Pazhi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #507
அன்பு காரணமாக அறிவிலாதவரை நம்புதல் எல்லா
மடமையும் தரும்.

Tamil Transliteration
Kaadhanmai Kandhaa Arivariyaarth Therudhal
Pedhaimai Ellaan Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #508
ஆராயாது எவனோ ஒருவனை நம்பினால் வழிவழித் தீராத
துன்பம் வரும்.

Tamil Transliteration
Theraan Piranaith Thelindhaan Vazhimurai
Theeraa Itumpai Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #509
ஆராயாது யாரையும் எளிதில் நம்பாதே. ஆய்ந்த பின்னும்
நம்பும் பொருளை நம்புக.

Tamil Transliteration
Therarka Yaaraiyum Theraadhu Therndhapin
Theruka Therum Porul.

மேலதிக விளக்கங்கள்
குறள் #510
ஆராயாது நம்புதலும் பெருந்துன்பமே! நம்பியவனை
ஐயப்படுத்தலும் பெருந்துன்பமே.

Tamil Transliteration
Theraan Thelivum Thelindhaankan Aiyuravum
Theeraa Itumpai Tharum.

மேலதிக விளக்கங்கள்
🡱