நன்றியில் செல்வம் (பயனிலாச் செல்வம் )

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1001
இடமெல்லாம் பெரும்பொருளை ஈட்டிவைத்து உண்ணாது
செத்தவனுக்கு உரிமை யாதுமில்லை.

Tamil Transliteration
Vaiththaanvaai Saandra Perumporul Aqdhunnaan
Seththaan Seyakkitandhadhu Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1002
எல்லாம் பொருளால் ஆகும் என்று கொடாது இறுக்கிய
பேதைக்கு இழிபிறப்பு உண்டாகும்

Tamil Transliteration
Porulaanaam Ellaamendru Eeyaadhu Ivarum
Marulaanaam Maanaap Pirappu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1003
ஈட்டிய பொருளை இறுகப் பற்றிக்கொண்டு புகழ்விட்ட
ஆடவர் பூமிக்குப் பாரம்.

Tamil Transliteration
Eettam Ivari Isaiventaa Aatavar
Thotram Nilakkup Porai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1004
ஒருவராலும் விரும்பப் படாத கஞ்சன் தனக்குப் பின் என்று
எதனைக் கருதுகிறான்?

Tamil Transliteration
Echchamendru Enennung Kollo Oruvaraal
Nachchap Pataaa Thavan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1005
பிறர்க்கு வழங்கான் தானும் உண்ணான் இவனுக்குப்
பலகோடி இருந்தால் என்ன?

Tamil Transliteration
Kotuppadhooum Thuyppadhooum Illaarkku Atukkiya
Kotiyun Taayinum Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1006
தானும் நுகரான் ஏழைக்கும் ஈயான் இவன்
பெருஞ்செல்வத்துக்கு ஒரு நோய்.

Tamil Transliteration
Edham Perunjelvam Thaandhuvvaan Thakkaarkkondru
Eedhal Iyalpilaa Thaan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1007
ஏழைக்கு யாதும் ஈயாதவனது செல்வம் அழகுள்ள குமரி
மணவாது மூத்தது போலும்.

Tamil Transliteration
Atraarkkondru Aatraadhaan Selvam Mikanalam
Petraal Thamiyalmooth Thatru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1008
யாராலும் விரும்பப் படாதவனது செல்வம் நடுவூரில்
நஞ்சுமரம் பழுத்தது போலாம்.

Tamil Transliteration
Nachchap Pataadhavan Selvam Natuvoorul
Nachchu Marampazhuth Thatru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1009
அன்பின்றித் தன் வாய் வயிற்றைக் கட்டிச் சேர்த்த
பொருளை எடுத்துக்கொள்வார் யாரோ?

Tamil Transliteration
Anporeeith Tharsetru Aranokkaadhu Eettiya
Onporul Kolvaar Pirar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1010
கொடைச் செல்வர்கள் சிலநாள் வறுமைப்படுதல் மேகம்
வறுமைப்படுவது போலும்.

Tamil Transliteration
Seerutaich Chelvar Sirudhuni Maari
Varangoorn Thanaiyadhu Utaiththu.

மேலதிக விளக்கங்கள்
🡱