நலம் புனைந்துரைத்தல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1111
அனிச்சப்பூவே! நற்பண்பு உடையாய் வாழ்க என் காதலி
உன்னைவிட மென்மையள்

Tamil Transliteration
Nanneerai Vaazhi Anichchame Ninninum
Menneeral Yaamveezh Paval.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1112
நான் ஒருவன் பார்க்கும் இவள் கண், மனமே! பலர்பார்க்கும்
மலர் ஒக்குமென் மயங்குகிறாய்.

Tamil Transliteration
Malarkaanin Maiyaaththi Nenje Ivalkan
Palarkaanum Poovokkum Endru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1113
மூங்கில் போலும் தோளிக்குத் தளிரே மேனி முத்தே பல்,
மலரே மணம், வேலே கண்.

Tamil Transliteration
Murimeni Muththam Muruval Verinaatram
Velunkan Veyththo Lavatku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1114
குவளைகள் இவள் கண்ணைக் காண நேர்ந்தால்
உவமையாகோம் என்று தலைசாய்த்துக் குனியும் .

Tamil Transliteration
Kaanin Kuvalai Kavizhndhu Nilannokkum
Maanizhai Kannovvem Endru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1115
ஓர் அனிச்சமலரைக் காம்புடன் சூடினாள்; இவள் இடைக்கு
நல்ல பறைகள் ஒலியா.

Tamil Transliteration
Anichchappook Kaalkalaiyaal Peydhaal Nukappirku
Nalla Pataaa Parai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1116
வானவட்டத்துச் சுழன்றுதிரியும் விண்மீன்கள் இது திங்கள்
இது மாதர் முகம் என அறியா.

Tamil Transliteration
Madhiyum Matandhai Mukanum Ariyaa
Padhiyin Kalangiya Meen.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1117
குறைந்து நிறையும் திங்களுக்குப் போலக் காதலி முகத்தில்
களங்கம் உண்டோ ?

Tamil Transliteration
Aruvaai Niraindha Avirmadhikkup Pola
Maruvunto Maadhar Mukaththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1118
என்காதலி முகம் போல ஒளிவிட முடியின் திங்களே !
நீயும் என்காதலுக்கு உரியை.

Tamil Transliteration
Maadhar Mukampol Olivita Vallaiyel
Kaadhalai Vaazhi Madhi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1119
மலர் கண்ணாளின் முகம் போல் ஆகவிரும்பின் திங்களே!
பலர் பார்க்கத் தோன்றாதே.

Tamil Transliteration
Malaranna Kannaal Mukamoththi Yaayin
Palarkaanath Thondral Madhi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1120
அனிச்ச மலரும் அன்னத்தின் இறகும் காதலியின் அடிக்கு
நெருஞ்சி முள்.

Tamil Transliteration
Anichchamum Annaththin Thooviyum Maadhar
Atikku Nerunjip Pazham.

மேலதிக விளக்கங்கள்
🡱