நாணுடைமை (வெட்கம் )

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1011
வெட்கம் என்பது தீயசெயலுக்கு நாணுதல்; பெண்களின்
வெட்கம் வேறுவகை.

Tamil Transliteration
Karumaththaal Naanudhal Naanun Thirunudhal
Nallavar Naanup Pira.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1012
உணவு உடை பின்வழி எல்லார்க்கும் பொது: வெட்கமே
நன்மக்களின் சிறப்பு.

Tamil Transliteration
Oonutai Echcham Uyirkkellaam Veralla
Naanutaimai Maandhar Sirappu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1013
உயிரெல்லாம் உடம்பைப்பற்றி நிற்கின்றன; நிறைகுணம்
வெட்கத்தைப்பற்றி நிற்கின்றது.

Tamil Transliteration
Oonaik Kuriththa Uyirellaam Naanennum
Nanmai Kuriththadhu Saalpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1014
பெரியவர்கட்கு வெட்கம் ஓர் அழகாகும்; வெட்கமில்லாத
வீறுநடை நோயாகும்.

Tamil Transliteration
Aniandro Naanutaimai Saandrorkku Aqdhindrel
Piniandro Peetu Natai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1015
பிறர்பழிக்கும் தம்பழிக்கும் நாணுபவரை வெட்கத்தின்
வாழ்விடமென உலகுபோற்றும்.

Tamil Transliteration
Pirarpazhiyum Thampazhiyum Naanuvaar Naanukku
Uraipadhi Ennum Ulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1016
நாணாகிய வேலியை அமைத்துக் கொண்டன்றி உயர்ந்தோர்
உலகத்தை மதியார்கள்.

Tamil Transliteration
Naanveli Kollaadhu Manno Viyangnaalam
Penalar Melaa Yavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1017
நாணம் மிக்கவர் அதற்காக உயிர்விடுவர் உயிருக்காக
நாணத்தை விடார்.

Tamil Transliteration
Naanaal Uyiraith Thurappar Uyirpporuttaal
Naandhuravaar Naanaal Pavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1018
பிறர் வெட்கப்படுதற்குத் தான் வெட்கப் படாவிடின் அவன்
செயலுக்கு அறம் வெட்கப்படும்.

Tamil Transliteration
Pirarnaanath Thakkadhu Thaannaanaa Naayin
Aramnaanath Thakkadhu Utaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1019
கொள்கை தவறினால் குடி அழியும்; நாணம் கெட்டால்
நன்மை கெடும்.

Tamil Transliteration
Kulanjutum Kolkai Pizhaippin Nalanjutum
Naaninmai Nindrak Katai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1020
நாணம் இல்லாதாரின் நடமாட்டம் மரப்பாவை கயிற்றால்
நடமாடியது போலும்.

Tamil Transliteration
Naanakath Thillaar Iyakkam Marappaavai
Naanaal Uyirmarutti Atru.

மேலதிக விளக்கங்கள்
🡱