நினைந்தவர் புலம்பல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1201
நினைத்தாலும் நீங்காத மகிழ்ச்சி தருதலால் கள்ளைக்
காட்டிலும் காமம் இன்பமானது.

Tamil Transliteration
Ullinum Theeraap Perumakizh Seydhalaal
Kallinum Kaamam Inidhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1202
எந்த அளவிற்கும் இனியது காமம்; காதலர் நினைத்தால்
துன்பம் ஒன்றும் வராது.

Tamil Transliteration
Enaiththonaru Inidhekaan Kaamamdhaam Veezhvaar
Ninaippa Varuvadhondru El.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1203
தும்மல் வருவதுபோல நின்றுவிடுதலின் அவர் என்னை
நினைப்பதுபோல் விட்டு விடுவாரோ?

Tamil Transliteration
Ninaippavar Pondru Ninaiyaarkol Thummal
Sinaippadhu Pondru Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1204
அவர் நெஞ்சில் நான் இருக்கின்றேனா? என் நெஞ்சிலோ
அவர் நன்றாக இருக்கின்றார்.

Tamil Transliteration
Yaamum Ulengol Avarnenjaththu Ennenjaththu
Oo Ulare Avar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1205
தன் நெஞ்சில் என்னை வரவொட்டாதவர் என் நெஞ்சில்
ஓயாது வர நாணவில்லையே.

Tamil Transliteration
Thamnenjaththu Emmaik Katikontaar Naanaarkol
Emnenjaththu Ovaa Varal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1206
அவரோடு கூடியிருந்த நாட்களை நினைப்பதால்
வாழ்கின்றேன்; வேறு எதனால் வாழ்கின்றேன்?

Tamil Transliteration
Matriyaan Ennulen Manno Avaroti Yaan
Utranaal Ulla Ulen.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1207
கூட்டத்தை மறந்தால் என்னாவேன்? மறவேன்; பிரிவை
நினைப்பினும் உள்ளம் கொதிக்கும்.

Tamil Transliteration
Marappin Evanaavan Markol Marappariyen
Ullinum Ullam Sutum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1208
எத்தனை முறை நினைத்தாலும் காதலர் சினவார்; எனக்கு
அவர்காட்டும் பெருமை அவ்வளவு.

Tamil Transliteration
Enaiththu Ninaippinum Kaayaar Anaiththandro
Kaadhalar Seyyum Sirappu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1209
நாம் ஒருவர் என்று சொன்ன காதலரின் கொடுமையை மிக
எண்ணி என் உயிர் போகும்.

Tamil Transliteration
Viliyumen Innuyir Verallam Enpaar
Aliyinmai Aatra Ninaindhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1210
துணிந்து சென்றவரைக் கண்டுபிடிப்பதற்குள் திங்களே! நீ
மறைந்து விடாதே ; வாழ்க.

Tamil Transliteration
Vitaaadhu Sendraaraik Kanninaal Kaanap
Pataaadhi Vaazhi Madhi.

மேலதிக விளக்கங்கள்
🡱