நிறையழிதல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1251
நாணத் தாழ்ப்பாள் இட்ட உறுதிக் கதவைக் காமக் கோடாலி
தகர்த்து விடும்.

Tamil Transliteration
Kaamak Kanichchi Utaikkum Niraiyennum
Naanuththaazh Veezhththa Kadhavu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1252
காமம் என்பது சிறிதும் இரக்கம் இல்லாமல் என்
நெஞ்சத்தை நடுயாமத்தும் ஆளுகின்றது.

Tamil Transliteration
Kaamam Enavondro Kannindren Nenjaththai
Yaamaththum Aalum Thozhil.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1253
நான் காமத்தை மறைக்கத்தான் செய்கின்றேன்; திமரெனத்
தும்மல்போல் வெளியாகின்றது.

Tamil Transliteration
Maraippenman Kaamaththai Yaano Kurippindrith
Thummalpol Thondri Vitum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1254
உறுதியுடையேன் என்று சொல்லுவேன் நான்; என் காமமோ
ஒளிவின்றி அம்பலப்படும்.

Tamil Transliteration
Niraiyutaiyen Enpenman Yaanoen Kaamam
Maraiyirandhu Mandru Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1255
வெறுத்தவர்பின் செல்லாத மானவுணர்ச்சி
காமநோயாளிக்குத் தெரியக் கூடியதன்று.

Tamil Transliteration
Setraarpin Sellaap Perundhakaimai Kaamanoi
Utraar Arivadhondru Andru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1256
வெறுத்தவரின் பின்னே செல்ல விரும்புதலால் என்னைச்
சேர்ந்த நோய் இரங்கத்தக்கது.

Tamil Transliteration
Setravar Pinseral Venti Aliththaro
Etrennai Utra Thuyar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1257
காதலர் காமத்தோடு நாம் விரும்பியன் செய்யின் நாணம்
என்ற உணர்ச்சி நமக்குத் தெரியாது.

Tamil Transliteration
Naanena Ondro Ariyalam Kaamaththaal
Peniyaar Petpa Seyin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1258
பசப்புடைய காதலனது தாழ்ந்த மொழியன்றோ
நம்பெண்மைக் கதவைத் தகர்க்கும் படை.

Tamil Transliteration
Panmaayak Kalvan Panimozhi Andronam
Penmai Utaikkum Patai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1259
நெஞ்சம் கூடவிரும்புவதைப் பார்த்துவிட்டுப் பிணங்கச்
சென்ற நானும் தழுவினேன்.

Tamil Transliteration
Pulappal Enachchendren Pullinen Nenjam
Kalaththal Uruvadhu Kantu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1260
தீயில் இட்ட கொழுப்புப்போல் உருகுபவர்க்குக் காதலரை
நெருங்கி ஊடி நிற்க முடியுமா?

Tamil Transliteration
Ninandheeyil Ittanna Nenjinaarkku Unto
Punarndhooti Nirpem Enal.

மேலதிக விளக்கங்கள்
🡱