பகைத்திறம் தெரிதல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #871 #872 #873 #874 #875 #876 #877 #878 #879 #880
குறள் #871
பகைக்கும் தீய குணத்தை யாரும் விளையாட்டாகவும்
விரும்புதல் கூடாது.

Tamil Transliteration
Pakaiennum Panpi Ladhanai Oruvan
Nakaiyeyum Ventarpaatru Andru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #872
வில்லுடைய வீரரைப் பகைத்துக் கொண்டாலும்
சொல்லுடைய புலவரைப் பகைக்காதே.

Tamil Transliteration
Viller Uzhavar Pakaikolinum Kollarka
Soller Uzhavar Pakai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #873
தனியனாக இருந்து பலரைப் பகைப்பவன் பித்தனைக்
காட்டிலும் இரங்கத்தக்கவன்.

Tamil Transliteration
Emur Ravarinum Ezhai Thamiyanaaip
Pallaar Pakaikol Pavan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #874
பகைவனையும் நண்பனாகக்கருதும் உயர்ந்தவனது
பெருந்தன்மையால் உலகம் வாழ்கின்றது.

Tamil Transliteration
Pakainatpaak Kontozhukum Panputai Yaalan
Thakaimaikkan Thangitru Ulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #875
தனக்கோ துணையில்லை; பகையோ இரண்டு: ஒரு
பகையை நல்ல துணையாக்கிக் கொள்க.

Tamil Transliteration
Thandhunai Indraal Pakaiyirantaal Thaanoruvan
Indhunaiyaak Kolkavatrin Ondru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #876
தெளியினும் தெளியாவிடினும் துன்பநிலையில் நம்பி
விடாதே: பகைத்து விடாதே.

Tamil Transliteration
Thera?num Theraa Vitinum Azhivinkan
Theraan Pakaaan Vital.

மேலதிக விளக்கங்கள்
குறள் #877
துன்பத்தை உணரா நண்பர்க்குச் சொல்லாதே;
தன்குறைபாட்டைப் பகைவர் முன் காட்டாதே.

Tamil Transliteration
Novarka Nondhadhu Ariyaarkku Mevarka
Menmai Pakaivar Akaththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #878
வகையாகத் தன்வலி பெருக்கிக் கொண்டால் மாற்றாரின்
ஆணவம் தானே மறையும்.

Tamil Transliteration
Vakaiyarindhu Tharseydhu Tharkaappa Maayum
Pakaivarkan Patta Serukku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #879
முள்ளுடைய மரத்தை முளையிலே அழிக்க ;
முதிர்ந்துவிடின் வெட்டுவார் கை புண்படும்.

Tamil Transliteration
Ilaidhaaka Mulmaram Kolka Kalaiyunar
Kaikollum Kaazhththa Itaththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #880
பகைப்பவரின் இறுமாப்பை அழிக்காதவர் பகைவர்
மூச்சுவிட்டாற் போதும், அழிவர்.

Tamil Transliteration
Uyirppa Ularallar Mandra Seyirppavar
Semmal Sidhaikkalaa Thaar.

மேலதிக விளக்கங்கள்
🡱