பசப்புறு பருவரல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1181
பிரிவை விரும்பியவர் கொடுமைக்கு இசைந்தேன்; பின் என்
பசலையை யார்க்குச் சொல்வது?

Tamil Transliteration
Nayandhavarkku Nalkaamai Nerndhen Pasandhaven
Panpiyaarkku Uraikko Pira.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1182
தந்தவர் அவர் என்னும் பெருமிதங் கொண்டு பசலை
படர்ந்து என் மேனிமேல் ஏறும்.

Tamil Transliteration
Avardhandhaar Ennum Thakaiyaal Ivardhandhen
Menimel Oorum Pasappu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1183
காமத்தையும் பசலையையும் மாற்றாகத் தந்து சாயலையும்
நாணையும் எடுத்துக் கொண்டார்.

Tamil Transliteration
Saayalum Naanum Avarkontaar Kaimmaaraa
Noyum Pasalaiyum Thandhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1184
நினைப்பதும் பேசுவதும் எல்லாம் அவரையே ; இருந்தும்
பசலை வந்தது கள்ளத்தனமா வேறா?

Tamil Transliteration
Ulluvan Manyaan Uraippadhu Avardhiramaal
Kallam Piravo Pasappu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1185
அதோ பார்! காதலர் போகிறார். இதோ பார்! என்மேனிமேல்
பசலை படர்கிறது.

Tamil Transliteration
Uvakkaanem Kaadhalar Selvaar Ivakkaanen
Meni Pasappoor Vadhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1186
இருள் வெளிச்சம் மறைவதை எதிரப் பார்க்கும் பசலை
தலைவன் தழுவாமையை எதிர்பார்க்கும்

Tamil Transliteration
Vilakkatram Paarkkum Irulepol Konkan
Muyakkatram Paarkkum Pasappu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1187
தழுவிக்கிடந்த நான் சிறிது தள்ளிப் படுத்தேன்;
அவ்வளவிற்கே பசலை கொட்டிக் கிடந்தது.

Tamil Transliteration
Pullik Kitandhen Putaipeyarndhen Avvalavil
Allikkol Vatre Pasappu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1188
பசலையுற்றாள் இவள் எனப் பழிக்கின்றனர் பிரிந்தாரே
அவர் எனச் சொல்வார் இல்லை .

Tamil Transliteration
Pasandhaal Ivalenpadhu Allaal Ivalaith
Thurandhaar Avarenpaar Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1189
பிரிவை இசைவித்த தோழி நலம் எனின் பட்டுப் போலும்
என் மேனி பசக்கட்டும்.

Tamil Transliteration
Pasakkaman Pattaangen Meni Nayappiththaar
Nannilaiyar Aavar Enin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1190
தோழி அவர் கொடுமையைத் தூற்றாளெனின் பசலைப்பேர்
பற்றிக் கவலையில்லை.

Tamil Transliteration
Pasappenap Perperudhal Nandre Nayappiththaar
Nalkaamai Thootraar Enin.

மேலதிக விளக்கங்கள்
🡱