படைச் செருக்கு

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #771 #772 #773 #774 #775 #776 #777 #778 #779 #780
குறள் #771
எதிரிகளே! என் தலைவன் முன் நில்லாதீர்! அவன் முன்
நின்று கல்லானவர் பலர்.

Tamil Transliteration
Ennaimun Nillanmin Thevvir Palarennai
Munnindru Kalnin Ravar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #772
காட்டு முயலைக் கொன்ற அம்பைக் காட்டினும்
யானைக்குறி தவறியவேலை ஏந்தல் சிறப்பு.

Tamil Transliteration
Kaana Muyaleydha Ampinil Yaanai
Pizhaiththavel Endhal Inidhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #773
பகைவரைக் கொல்லுதல் வீரம்; அவர்க்குத் துன்பம்வரின்
உதவுதல் வீரத்தின் சிகரம்.

Tamil Transliteration
Peraanmai Enpa Tharukanon Rutrakkaal
Ooraanmai Matradhan Eqku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #774
கைகேயலை யானைமேல் வீசிவரும் வீரன் நெஞ்சில்
தைத்த வேலைப் பறித்துச் சிரிப்பான்.

Tamil Transliteration
Kaivel Kalitrotu Pokki Varupavan
Meyvel Pariyaa Nakum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #775
பார்த்த கண் பகைவேலுக்கு மூடி இமைப்பினும் வீரர்
புறங்காட்டியதற்குச் சமமாம்.

Tamil Transliteration
Vizhiththakan Velkona Teriya Azhiththimaippin
Ottandro Vanka Navarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #776
வீரப்புண் படாத நாட்களை யெல்லாம் குற்ற நாட்களாகக்
கொள்வான் வீரன்.

Tamil Transliteration
Vizhuppun Pataadhanaal Ellaam Vazhukkinul
Vaikkumdhan Naalai Etuththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #777
புகழை மதித்து உயிரை மதியாத வீரர் கட்டிய வீரக்கழலே
கண்ணுக்கு அழகியது.

Tamil Transliteration
Suzhalum Isaiventi Ventaa Uyiraar
Kazhalyaappuk Kaarikai Neerththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #778
போர்வரின் உயிருக்கு அஞ்சாத வீரர் அரசன் அடக்கினும்
வீரவுணர்ச்சி குறையார்.

Tamil Transliteration
Urinuyir Anjaa Maravar Iraivan
Serinum Seerkundral Ilar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #779
வஞ்சினம் தவறாமல் உயிர் கொடுத்தவரை வெற்றி
தவறினார் என்று தண்டிப்பார் உண்டோ ?

Tamil Transliteration
Izhaiththadhu Ikavaamaich Chaavaarai Yaare
Pizhaiththadhu Orukkir Pavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #780
காத்தவர் கண்கலங்கும்படி சாகப் பெற்றால் அச்சாவு
வேண்டியாயினும் பெறும் சிறப்பினது.

Tamil Transliteration
Purandhaarkan Neermalkach Chaakirpin Saakkaatu
Irandhukol Thakkadhu Utaiththu.

மேலதிக விளக்கங்கள்
🡱