பிறனில் விழையாமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #141 #142 #143 #144 #145 #146 #147 #148 #149 #150
குறள் #141
பிறன் மனைவியை விரும்பும் மடமை உலகில் அறம்
பொருள் அறிந்தவரிடம் இருப்பதில்லை .

Tamil Transliteration
Piranporulaal Pettozhukum Pedhaimai Gnaalaththu
Aramporul Kantaarkan Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #142
பிறனது வாயிலில் நிற்பவனைப் போலப் பெரும்பாவியும்
பெரும் பேதையும் இல்லை.

Tamil Transliteration
Arankatai Nindraarul Ellaam Pirankatai
Nindraarin Pedhaiyaar Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #143
நம்பினவர் வீட்டில் தீமை செய்பவர் செத்தவரல்லது
வாழ்பவர் அல்லர்.

Tamil Transliteration
Vilindhaarin Verallar Mandra Thelindhaaril
Theemai Purindhu Ozhuku Vaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #144
அறிவின்றி அயலான் மனைவியை விரும்புபவன் எவ்வளவு
பெரியவனாயினும் என்ன?

Tamil Transliteration
Enaiththunaiyar Aayinum Ennaam Thinaiththunaiyum
Theraan Piranil Pukal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #145
எளிதென்று கருதிப் பிறன்மனை நுழைபவன் என்றும் தீராத
பழியை எய்துவான்.

Tamil Transliteration
Elidhena Illirappaan Eydhumenj Gnaandrum
Viliyaadhu Nirkum Pazhi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #146
பகை பாவம் அச்சம் பழி என்ற நான்கும் பிறன் வீட்டில்
நுழைவானை விடமாட்டா.

Tamil Transliteration
Pakaipaavam Achcham Pazhiyena Naankum
Ikavaavaam Illirappaan Kan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #147
நெறியோடு வாழும் குடும்பத்தான் யார்? இன்னொரு
குடும்பத்தாளை விரும்பாதவனே

Tamil Transliteration
Araniyalaan Ilvaazhvaan Enpaan Piraniyalaal
Penmai Nayavaa Thavan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #148
பிறன்மனையை விரும்பி நினையாத பேராற்றல்
சான்றோர்க்கு அறமும் ஒழுக்கமும் ஆம்.

Tamil Transliteration
Piranmanai Nokkaadha Peraanmai Saandrorkku
Aranondro Aandra Vozhukku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #149
உலகில் எந்நன்மைக்கும் உரியவர் யார்? பிறனுக்கு
உரியவளை அணையாதவரே.

Tamil Transliteration
Nalakkuriyaar Yaarenin Naamaneer Vaippin
Pirarkkuriyaal Tholdhoyaa Thaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #150
அறங்கடந்து தீமை பல செய்யினும் செய்க பிறன் மனை
விருப்பத்தை அறவே ஒழிக.

Tamil Transliteration
Aranvaraiyaan Alla Seyinum Piranvaraiyaal
Penmai Nayavaamai Nandru.

மேலதிக விளக்கங்கள்
🡱