புணர்ச்சி மகிழ்தல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1101
கண்டு கேட்டு உண்டு முகர்ந்து தொடும் ஐம்புல இன்பமும்
இவளிடமே உண்டு

Tamil Transliteration
Kantukettu Untuyirththu Utrariyum Aimpulanum
Ondhoti Kanne Ula.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1102
நோய்வேறு அதற்கு மருந்து வேறு இவள் தந்த நோய்க்கோ
இவளே மருந்து.

Tamil Transliteration
Pinikku Marundhu Piraman Aniyizhai
Thannoikkuth Thaane Marundhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1103
தன்காதலியின் மென்தோளில் துயிலுதலைவிடத்
திருமாலின் மேலுலகம் இனிதாமோ?

Tamil Transliteration
Thaamveezhvaar Mendrol Thuyilin Inidhukol
Thaamaraik Kannaan Ulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1104
நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும்; இன்ன தீயை
இவள் எங்கிருந்து பெற்றாள்?

Tamil Transliteration
Neengin Theru?um Kurukungaal Thannennum
Theeyaantup Petraal Ival?.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1105
பூங்கொத்து நிறைந்த கூந்தலவள் தோள்கள்
விரும்பியபோது விரும்பிய பொருள் ஆகியவை .

Tamil Transliteration
Vetta Pozhudhin Avaiyavai Polume
Thottaar Kadhuppinaal Thol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1106
உடல் அணையுந்தோறும் உயிர் தழைத்தலால் இவளுக்குத்
தோள்கள் அமிழ்தால் ஆயவை.

Tamil Transliteration
Urudhoru Uyirdhalirppath Theentalaal Pedhaikku
Amizhdhin Iyandrana Thol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1107
அழகிய மாநிறப் பெண்ணைத் தழுவுதல் தன்வீட்டிலிருந்து
தன் பங்கை உண்பதுபோல்

Tamil Transliteration
Thammil Irundhu Thamadhupaaththu Untatraal
Ammaa Arivai Muyakku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1108
காற்றும் புகாதபடி தழுவும் தழுவல் காதலர் இருவர்க்கும்
பேரின்பமாம்.

Tamil Transliteration
Veezhum Iruvarkku Inidhe Valiyitai
Pozhap Pataaa Muyakku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1109
பிணங்குதல் தெளிதல் சேருதல் இவை இன்பக்
கூட்டுறவினர் பெற்ற பயன்கள்.

Tamil Transliteration
Ootal Unardhal Punardhal Ivaikaamam
Kootiyaar Petra Payan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1110
நகையுடையாளைக் கூடுந்தோறும் காமவுணர்ச்சி அறிய
அறிய அறியாமையை அறிவதுபோலும்.

Tamil Transliteration
Aridhoru Ariyaamai Kantatraal Kaamam
Seridhorum Seyizhai Maattu.

மேலதிக விளக்கங்கள்
🡱