புணர்ச்சி விதும்பல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1281
நினைக்கவும் காணவும் மகிழ்ச்சி தருதல் கள்ளுக்கு
இல்லை; காமத்திற்கு உண்டு.

Tamil Transliteration
Ullak Kaliththalum Kaana Makizhdhalum
Kallukkil Kaamaththir Kuntu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1282
பனையளவு காமவேட்கை பெருகுமாயின்
தினையளவுகூடஊடுதல் ஆகாது.

Tamil Transliteration
Thinaiththunaiyum Ootaamai Ventum Panaith Thunaiyum
Kaamam Niraiya Varin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1283
புறக்கணித்துத் தாம் விரும்பியனவே செய்தாலும்
காதலனைக் காணாமல் என் கண்கள் பொருந்தா.

Tamil Transliteration
Penaadhu Petpave Seyyinum Konkanaik
Kaanaa Thamaiyala Kan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1284
தோழி நான் ஊடச் சென்றேன்; என் நெஞ்சோ அது மறந்து
கூடச்சென்றது

Tamil Transliteration
Ootarkan Sendrenman Thozhi Adhumarandhu
Kootarkan Sendradhu En Nenju.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1285
மைதீட்டுங்கால் தூரிகை கண்ணுக்குத் தெரியாது;
அவரைக்கண்டபோது பழி எனக்குத் தெரியாது

Tamil Transliteration
Ezhudhungaal Kolkaanaak Kannepol Konkan
Pazhikaanen Kanta Itaththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1286
காணும்போது அவர் பிழையைக் காண்பதில்லை;
காணாதபோது பிழைதவிர வேறு காண்பதில்லை

Tamil Transliteration
Kaanungaal Kaanen Thavaraaya Kaanaakkaal
Kaanen Thavaral Lavai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1287
கரைசேர்த்தலை அறிந்து நீரில் பாய்வதுபோல் பொய் என்று
தெரிந்தும் ஊடிப் பயன் என்ன?

Tamil Transliteration
Uyththal Arindhu Punalpaai Pavarepol
Poiththal Arindhen Pulandhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1288
இழிவான துன்பங்கள் செய்யினும், கள்வனே! நின்மார்பு
குடியாக்குக் கள் போன்றது.

Tamil Transliteration
Iliththakka Innaa Seyinum Kaliththaarkkuk
Kallatre Kalvanin Maarpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1289
காமவுணர்வு மலரைவிட மென்மையானது: அதன் பக்குவம்
அறிந்து துய்ப்பார் மிகச்சிலரே.

Tamil Transliteration
Malarinum Mellidhu Kaamam Silaradhan
Sevvi Thalaippatu Vaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1290
தழுவுதற்கு என்னை விடத் தான் துடிதுடித்துக் கண்ணால்
ஊடிக் கலங்கினாள்.

Tamil Transliteration
Kannin Thuniththe Kalanginaal Pulludhal
Enninum Thaanvidhup Putru.

மேலதிக விளக்கங்கள்
🡱