பெண்வழிச் சேறல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #901 #902 #903 #904 #905 #906 #907 #908 #909 #910
குறள் #901
பெண்வழி நடப்பவர் பெரும்பயன் அடையார்; காரியம்
விரும்புபவர் அங்ஙனம் நடவார்.

Tamil Transliteration
Manaivizhaivaar Maanpayan Eydhaar Vinaivizhaiyaar
Ventaap Porulum Adhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #902
காரியம் பேணாமல் மனைவிவழி நடப்பவனது மேன்மை
பெரிய வெட்கத்துக்கு உரியதாகும்.

Tamil Transliteration
Penaadhu Penvizhaivaan Aakkam Periyadhor
Naanaaka Naanuth Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #903
மனைவிக்குப் பணிந்து நடக்கும் போக்கு என்றும்
அறிஞரிடை வெட்கம் தரும்.

Tamil Transliteration
Illaalkan Thaazhndha Iyalpinmai Egngnaandrum
Nallaarul Naanuth Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #904
மனைவிக்கு அஞ்சுபவன் மறுமை இழந்தவன்; அவன்
காரியத்திறம் சிறப்பு அடையாது.

Tamil Transliteration
Manaiyaalai Anjum Marumaiyi Laalan
Vinaiyaanmai Veereydha Lindru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #905
மனைவிக்கு அஞ்சுபவன் நல்லவர்க்கு நல்லது செய்ய
என்றும் அஞ்சுவான்.

Tamil Transliteration
Illaalai Anjuvaan Anjumar Regngnaandrum
Nallaarkku Nalla Seyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #906
மனைவியின் அழகிய தோளுக்கு அடங்கியவர் தேவர்
போல வாழ்ந்தாலும் சிறப்பில்லை.

Tamil Transliteration
Imaiyaarin Vaazhinum Paatilare Illaal
Amaiyaardhol Anju Pavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #907
மனைவி கட்டளைப்படி நடக்கும் ஆடவனைவிட
நாணமுடைய பெண்ணே மதிக்கத்தக்கவள்.

Tamil Transliteration
Penneval Seydhozhukum Aanmaiyin Naanutaip
Penne Perumai Utaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #908
நல்ல நெற்றியுடையவள் சொற்படி நடப்பவன் நண்பர்க்கு
உதவான்; நல்லதும் செய்யான்.

Tamil Transliteration
Nattaar Kuraimutiyaar Nandraatraar Nannudhalaal
Pettaangu Ozhuku Pavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #909
மனைவி ஏவக் காரியம் செய்வாரிடத்து அறமும் பொருளும்
இன்பமும் இரா.

Tamil Transliteration
Aravinaiyum Aandra Porulum Piravinaiyum
Peneval Seyvaarkan Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #910
சிந்தனை செறிந்த மனத்திட்பம் உடையார்பால் மனைவி
சொற்படி நடக்கும் மடமை இராது.

Tamil Transliteration
Enserndha Nenjath Thitanutaiyaarkku Egngnaandrum
Penserndhaam Pedhaimai Il.

மேலதிக விளக்கங்கள்
🡱