பெரியாரைப் பிழையாமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #891 #892 #893 #894 #895 #896 #897 #898 #899 #900
குறள் #891
எதுவும் செயவல்லவரின் ஆற்றலைப் பழிக்காதே; அதுவே
தன்னைக்காக்கும் தலையாய நெறி.

Tamil Transliteration
Aatruvaar Aatral Ikazhaamai Potruvaar
Potralul Ellaam Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #892
பெரிய ஆற்றலுடையாரை மதியாது நடந்தால் தவிர்க்க
முடியாத துன்பம் வரும்.

Tamil Transliteration
Periyaaraip Penaadhu Ozhukir Periyaaraal
Peraa Itumpai Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #893
தொலைக்க நினைப்பின் தொலைக்க வல்லாரிடம்
தொலைய வேண்டின் உன்மனம் போல் நடக்க.

Tamil Transliteration
Ketalventin Kelaadhu Seyka Atalventin
Aatru Pavarkan Izhukku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #894
வலியாரை மெலியார் வம்புக்கு இழுத்தல் யமனைக்
கையால் அழைப்பது போலாகும்

Tamil Transliteration
Kootraththaik Kaiyaal Viliththatraal Aatruvaarkku
Aatraadhaar Innaa Seyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #895
வலிமிக்க வேந்தனை எதிர்த்துக்கொண்டவர் எங்கெங்கு
போனாலும் உய்ய முடியுமா?

Tamil Transliteration
Yaantuch Chendru Yaantum Ularaakaar Vendhuppin
Vendhu Serappat Tavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #896
தவறி நெருப்பில் விழுந்தாலும் தப்பிக்கலாம்; பெரியவர்க்குத்
தவறு செய்தால் பிழைப்பில்லை.

Tamil Transliteration
Eriyaal Sutappatinum Uyvuntaam Uyyaar
Periyaarp Pizhaiththozhuku Vaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #897
எல்லாத் தகுதியும் நிறைந்தவர் சினந்தால் ஏற்றமான
வாழ்வும் செல்வமும் என்னாகும்?

Tamil Transliteration
Vakaimaanta Vaazhkkaiyum Vaanporulum Ennaam
Thakaimaanta Thakkaar Serin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #898
குன்றுபோல் வலியுடையார் அழிக்க நினைப்பின்
குடிதழைத்து நின்றவரும் வழியின்றி மறைவர் .

Tamil Transliteration
Kundrannaar Kundra Madhippin Kutiyotu
Nindrannaar Maaivar Nilaththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #899
மேலான கொள்கையர் சீறினால் இடைநடுவே வேந்தனும்
அரசு இழப்பான்

Tamil Transliteration
Endhiya Kolkaiyaar Seerin Itaimurindhu
Vendhanum Vendhu Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #900
சிறப்பு மிக்க பெரியவர் சினந்தால் ஆற்றல் மிக்கவர்
துணையிருப்பினும் மீளமுடியாது.

Tamil Transliteration
Irandhamaindha Saarputaiyar Aayinum Uyyaar
Sirandhamaindha Seeraar Serin.

மேலதிக விளக்கங்கள்
🡱