மருந்து

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #941 #942 #943 #944 #945 #946 #947 #948 #949 #950
குறள் #941
மருத்துவர் கூறும் வாத பித்த கபங்கள் கூடினாலும்
குறைந்தாலும் நோய் தரும்.

Tamil Transliteration
Mikinum Kuraiyinum Noiseyyum Noolor
Valimudhalaa Enniya Moondru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #942
முன் உண்டது செரித்தது பார்த்து உண்டால் உடம்புக்கு
மருந்து எதுவும் வேண்டாம்.

Tamil Transliteration
Marundhena Ventaavaam Yaakkaikku Arundhiyadhu
Atradhu Potri Unin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #943
செரித்தால் செரிமானம் பார்த்து உண் : அதுவே உடல்
பெற்றவன் நெடுநாள் வாழும் நெறி.

Tamil Transliteration
Atraal Aravarindhu Unka Aqdhutampu
Petraan Netidhuykkum Aaru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #944
செரித்தது பார்த்து அம்முறை பற்றி ஒத்துக்கொள்வதை
நன்கு பசித்த பின் உண்க;

Tamil Transliteration
Atradhu Arindhu Kataippitiththu Maaralla
Thuykka Thuvarap Pasiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #945
ஒத்துக்கொள்வதையும் அளவாக உண்டால் உயிர்க்கு யாதும்
நோய் இல்லை.

Tamil Transliteration
Maarupaatu Illaadha Unti Maruththunnin
Oorupaatu Illai Uyirkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #946
கழிவறிந்து உண்பவனிடம் உடல் நலம் இருக்கும்; நிரம்பத்
தின்னியிடம் நோய் குடிகொள்ளும்.

Tamil Transliteration
Izhivarindhu Unpaankan Inpampol Nirkum
Kazhiper Iraiyaankan Noi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #947
பசியளவு தெரியாமல் மிக உண்டால் நோய் அளவில்லாமல்
வரும்.

Tamil Transliteration
Theeyala Vandrith Theriyaan Peridhunnin
Noyala Vindrip Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #948
நோயையும் காரணத்தையும் தீர்க்கும் வழியையும்
மருத்துவன் அறிந்து வெற்றியாகச் செய்க.

Tamil Transliteration
Noinaati Noimudhal Naati Adhudhanikkum
Vaainaati Vaaippach Cheyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #949
நோயாளியின் நிலையையும் நோயின் நிலையையும்
காலத்தையும் மருத்துவன் அறிந்து செய்க

Tamil Transliteration
Utraan Alavum Piniyalavum Kaalamum
Katraan Karudhich Cheyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #950
நோயாளி மருத்துவன் மருந்து துணையாளி என்ற நான்கும்
மருத்துவத்தின் கூறுகள்.

Tamil Transliteration
Utravan Theerppaan Marundhuzhaich Chelvaanendru
Appaal Naar Kootre Marundhu.

மேலதிக விளக்கங்கள்
🡱