மானம்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #961 #962 #963 #964 #965 #966 #967 #968 #969 #970
குறள் #961
கட்டாயம் செய்ய வேண்டியன் என்றாலும் பெருமைக்குக்
குறைவானவற்றைச் செய்யற்க

Tamil Transliteration
Indri Amaiyaach Chirappina Aayinum
Kundra Varupa Vital.

மேலதிக விளக்கங்கள்
குறள் #962
பெருமையொடு பேராற்றல் வேண்டுபவர் புகழ்களில் மானக்
குறைவானவை செய்யார்.

Tamil Transliteration
Seerinum Seeralla Seyyaare Seerotu
Peraanmai Ventu Pavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #963
வளம் பெருகும்போது பணிவு வேண்டும்; வளம்
சுருங்கும்போது பெருமிதம் வேண்டும்.

Tamil Transliteration
Perukkaththu Ventum Panidhal Siriya
Surukkaththu Ventum Uyarvu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #964
மக்கள் உயர்ந்த தரத்திலிருந்து இறங்கினால்
தலையிலிருந்து விழுந்த மயிர் போல்வர்.

Tamil Transliteration
Thalaiyin Izhindha Mayiranaiyar Maandhar
Nilaiyin Izhindhak Katai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #965
குண்டுமணி அளவு தரக்குறைவாக நடந்தால் மலைபோல்
உயர்ந்தவரும் தாழ்வர்.

Tamil Transliteration
Kundrin Anaiyaarum Kundruvar Kundruva
Kundri Anaiya Seyin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #966
மதியாதார் பின்னே மானங்கெட்டு நிற்பதேன்? புகழ் வருமா?
தேவருலகு கிடைக்குமா?

Tamil Transliteration
Pukazhindraal Puththelnaattu Uyyaadhaal Enmatru
Ikazhvaarpin Sendru Nilai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #967
பகைவருக்குப் பின் போய் வாழ்ந்தான் என்பதினும்
மானத்தோடு கெட்டான் என்பது நல்லது

Tamil Transliteration
Ottaarpin Sendroruvan Vaazhdhala?n Annilaiye
Kettaan Enappatudhal Nandru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #968
மானத்தின் ஏற்றம் அழியும் நிலையில் உடலை வளர்த்தல்
உயிருக்கு மருந்தாகுமா?

Tamil Transliteration
Marundhomatru Oonompum Vaazhkkai Perundhakaimai
Peetazhiya Vandha Itaththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #969
மயிர் பறிப்பின் இறக்கும் கவரிமான் போன்றவர் மானம்
போவதாயின் உயிரைப் போக்குவர்.

Tamil Transliteration
Mayirneeppin Vaazhaak Kavarimaa Annaar
Uyirneeppar Maanam Varin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #970
இழிவு நேர்ந்தால் சாகும் மானமுடையவரின் புகழ் விளக்கை
உலகம் தொழுது போற்றும்.

Tamil Transliteration
Ilivarin Vaazhaadha Maanam Utaiyaar
Olidhozhudhu Eththum Ulaku.

மேலதிக விளக்கங்கள்
🡱