வாழ்க்கைத் துணைநலம்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #51 #52 #53 #54 #55 #56 #57 #58 #59 #60
குறள் #51
வாழ்க்கைத்துணை யார்? குடும்பப் பண்பினள்; கணவன்
வருவாய்க் கேற்ப வாழ்பவள்.

Tamil Transliteration
Manaikdhakka Maanputaiyal Aakiththar Kontaan
Valaththakkaal Vaazhkkaith Thunai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #52
வீட்டுப்பண்பு மனைவியிடத்து இல்லையானால் வாழ்வில்
பிறநலம் இருந்தும் பயனில்லை

Tamil Transliteration
Manaimaatchi Illaalkan Illaayin Vaazhkkai
Enaimaatchith Thaayinum Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #53
மனைவிக்குப் பண்பிருப்பின் எது இல்லை மனைவிக்குப்
பண்பில்லை எனின் எது உண்டு?

Tamil Transliteration
Illadhen Illaval Maanpaanaal Ulladhen
Illaval Maanaak Katai?.

மேலதிக விளக்கங்கள்
குறள் #54
கற்புத்திண்மை செறிவாக இருப்பின் ஆணுக்கு மனைவியினும்
நற்பேறு உண்டா?

Tamil Transliteration
Pennin Perundhakka Yaavula Karpennum
Thinmaiun Taakap Perin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #55
தெய்வத்தை வணங்காது கணவனை வணங்குபவள்
பெய்யென்றால் மழையும் பெய்யுமே.

Tamil Transliteration
Theyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal
Peyyenap Peyyum Mazhai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #56
தன்னையும் கணவனையும் புகழையும் போற்றிச் சுறுசுறுப்பாக
இருப்பவளே மனைவி.

Tamil Transliteration
Tharkaaththuth Tharkontaar Penith Thakaisaandra
Sorkaaththuch Chorvilaal Pen.

மேலதிக விளக்கங்கள்
குறள் #57
மனைவியர்க்குக் கற்புக் காவலே காவல்; வீட்டுச் சிறை என்ன
பயன் செய்யும்?

Tamil Transliteration
Siraikaakkum Kaappevan Seyyum Makalir
Niraikaakkum Kaappe Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #58
கணவனது அன்பைப் பெறும் மனைவியர் மேலுலகிலும்
பெருஞ்சிறப்புப் பெறுவர்.

Tamil Transliteration
Petraar Perinperuvar Pentir Perunjirappup
Puththelir Vaazhum Ulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #59
மனைவி புகழ் காவாவிடின் பகைவர் முன் காளை போன்ற நடை
கணவனுக்கு இராது.

Tamil Transliteration
Pukazhpurindha Illilorkku Illai Ikazhvaarmun
Erupol Peetu Natai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #60
மனைவியின் பண்பே குடும்பத்துக்கு மங்கலம்: குழந்தைப் பேறே
குடும்பத்தின் நல்லணி.

Tamil Transliteration
Mangalam Enpa Manaimaatchi Matru Adhan
Nankalam Nanmakkat Peru.

மேலதிக விளக்கங்கள்
🡱