வினைசெயல் வகை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #671 #672 #673 #674 #675 #676 #677 #678 #679 #680
குறள் #671
ஆராய்ந்து ஒரு துணிவுக்கு வரவேண்டும்; அத்துணிவைச்
செய்யாது தாழ்த்தல் தீதாகும்.

Tamil Transliteration
Soozhchchi Mutivu Thuniveydhal Aththunivu
Thaazhchchiyul Thangudhal Theedhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #672
தாழ்த்துச்செய்யும் வினையைத் தாழ்த்துச்செய்க ; உடனே
செய்ய வேண்டியதைக் கடத்தாதே.

Tamil Transliteration
Thoonguka Thoongich Cheyarpaala Thoongarka
Thoongaadhu Seyyum Vinai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #673
முடிந்தவரை தூதால் முடித்துக்கொள்ளல் நன்று:
முடியாக்கால் பலிக்கு முறை பார்த்துச் செய்க.

Tamil Transliteration
Ollumvaa Yellaam Vinainandre Ollaakkaal
Sellumvaai Nokkich Cheyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #674
காரியக்குறை பகைக்குறை என்ற இரண்டும் நெருப்புக்குறை
போல வளர்ந்து அழிக்கும்.

Tamil Transliteration
Vinaipakai Endrirantin Echcham Ninaiyungaal
Theeyechcham Polath Therum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #675
பொருள் கருவி காலம் செயல் இடம் என்ற ஐந்தினையும்
மயக்கமற ஆராய்ந்து செய்க.

Tamil Transliteration
Porulkaruvi Kaalam Vinaiyitanotu Aindhum
Iruldheera Ennich Cheyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #676
முடிவும் இடையூறுகளும் முடிந்த பின்னர் வரும் பயனும்
பார்த்துச் செய்க

Tamil Transliteration
Mutivum Itaiyoorum Mutriyaangu Eydhum
Patupayanum Paarththuch Cheyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #677
ஒருசெயலைச் செய்பவன் செய்யும் முறை அதனை
நன்கறிந்தவனது உறுதியைப் பெறுதல்.

Tamil Transliteration
Seyvinai Seyvaan Seyanmurai Avvinai
Ullarivaan Ullam Kolal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #678
யானையைக் கொண்டு யானை பிடிப்பதுபோல
ஒருசெயலால் இன்னொன்றையும் செய்துகொள்.

Tamil Transliteration
Vinaiyaan Vinaiyaakkik Kotal Nanaikavul
Yaanaiyaal Yaanaiyaath Thatru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #679
நண்பர்க்கு நல்லன செய்தலைக் காட்டினும் விரைவாகப்
பகைவரை அணைத்தல் வேண்டும்.

Tamil Transliteration
Nattaarkku Nalla Seyalin Viraindhadhe
Ottaarai Ottik Kolal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #680
சிற்றரசர் குடிமக்கள் நடுங்குவது கண்டு தூதுவரின்
பேரரசரைப் பணிந்து கொள்வர்.

Tamil Transliteration
Uraisiriyaar Ulnatungal Anjik Kuraiperin
Kolvar Periyaarp Panindhu.

மேலதிக விளக்கங்கள்
🡱