வினைத்தூய்மை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #651 #652 #653 #654 #655 #656 #657 #658 #659 #660
குறள் #651
நல்ல துணை முன்னேற்றத்தைத் தரும்; நல்ல செயல்
வேண்டியன எல்லாம் தரும்.

Tamil Transliteration
Thunainalam Aakkam Tharuum Vinainalam
Ventiya Ellaan Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #652
புகழும் நன்மையும் தராத காரியத்தை என்றும் ஒழித்துவிட
வேண்டும்.

Tamil Transliteration
Endrum Oruvudhal Ventum Pukazhotu
Nandri Payavaa Vinai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #653
முன்னேற வேண்டும் என்பவர் மதிப்புக் குறையும்
காரியங்களைக் கொள்ளாது விடுக.

Tamil Transliteration
Oodhal Ventum Olimaazhkum Seyvinai
Aaadhum Ennu Mavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #654
அதிராத அறிஞர் நெருக்கடிப்பட்டாலும் இழிந்த செயல்களைச்
செய்யார்.

Tamil Transliteration
Itukkan Patinum Ilivandha Seyyaar
Natukkatra Kaatchi Yavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #655
என்செய்தேன் என்று பின்வருந்தும் செயலைச் செய்யாதே;
செய்தால் திரும்பவும் செய்யாதே.

Tamil Transliteration
Etrendru Iranguva Seyyarka Seyvaanel
Matranna Seyyaamai Nandru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #656
பெரியவர் பழிக்கும் தீய வினைகளை நின்தாய் பசித்துக்
கிடந்தாலும் செய்யாதே.

Tamil Transliteration
Eendraal Pasikaanpaan Aayinunj Cheyyarka
Saandror Pazhikkum Vinai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #657
நல்லவர் பழிசூடி எய்தும் செல்வத்தினும் அவர்தம்
வறுமையே பெருமையுடையது.

Tamil Transliteration
Pazhimalaindhu Eydhiya Aakkaththin Saandror
Kazhinal Kurave Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #658
விலக்கியவற்றை விலக்காது செய்தவர்க்குக் காரியம்
முடிந்தாலும் துன்பம் உண்டாகும்.

Tamil Transliteration
Katindha Katindhoraar Seydhaarkku Avaidhaam
Mutindhaalum Peezhai Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #659
பிறர் அழக்கொண்டவை நாம் அழப்போகும்; நல்லவை முன்
தொலையினும் பின் பயன் தரும்.

Tamil Transliteration
Azhak Konta Ellaam Azhappom Izhappinum
Pirpayakkum Narpaa Lavai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #660
ஏமாற்றிக் கொண்ட பொருள் நிலைக்காது : சுடாத
மண்பானையில் நீர் தங்குமா?

Tamil Transliteration
Salaththaal Porulseydhe Maarththal Pasuman
Kalaththulneer Peydhireei Yatru.

மேலதிக விளக்கங்கள்
🡱